மைதானத்திற்கு திப்பு சுல்தான் பெயர்

குடியரசு தினமான ஜனவரி 26 அன்று சர்ச்சைக்குரிய மலாட் விளையாட்டு வளாகத்திற்கு, 18ம் நூற்றாண்டை சேர்ந்த மைசூரு அரசனும் ஹிந்துக்கள் பலரை கொன்ற கொடுங்கோலனுமான திப்பு சுல்தானின் பெயரை சூட்டப்படுவதாக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான அஸ்லாம் ஷேக் அறிவித்தார். இதையடுத்து அங்கு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பா.ஜ.கவினர், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, பஜரங் தளம் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் சிலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.கவை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “திப்பு சுல்தான் ஹிந்துக்களுக்கு எதிராக பல கொடுமைகளை இழைத்தவர். அவருக்கு மரியாதை கொடுப்பதை பா.ஜ.க ஒருபோதும் ஏற்காது. இதனை ரத்து செய்ய வேண்டும்” என கூறினார். இதனையடுத்து சிவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே, மும்பை மாநகராட்சி பெயர் சூட்டும் முடிவை இன்னும் முடிவுசெய்யவில்லை என்று கூறி மக்களின் கோபத்திற்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.