கொரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் மூடியதால், குழந்தைகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி நடத்தப்படும் வகுப்பு ஆறு மணி நேரம் நீடிப்பதாகவும் அதனால் விரக்தி அடைந்துள்ளதாகவும் காஷ்மீரை சேர்ந்த ஆறு வயது சிறுமி, பிரதமர் மோடியிடம் புகாரளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 1 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், ‘எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு துவங்கி ஆங்கிலம், கணிதம், உருது, சுற்றுச்சூழல் கல்வி, கணினி வகுப்பு என மதியம் 2 மணி வரை நீள்கிறது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது.சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்?என்ன செய்ய முடியும் மோடி சாஹிப்?’ என்று மழலை மொழியில் கேட்டுள்ளார் இந்த சிறுமி.