கோயில் இடிப்பில் தி,மு.க கவனம்

தமிழகத்தில் தி.மு.க அரசு பதவியேற்றதில் இருந்து ஆட்சி நடக்கிறதோ இல்லையோ ஹிந்துக்களின் கோயில்கள் இடிப்பது மட்டும் தொடர்கிறது. அவ்வகையில், கோவை மாவட்டம், சூலூரில் உள்ள வாசுதேவர் கோயிலை கடந்த 19ம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இடித்துத் தள்ளியுள்ளது தி.மு.க அரசு. இதற்கு அப்பகுதி ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காமல் இடித்து தள்ளியிருப்பது தி.மு.க அரசின் ஹிந்து விரோத போக்கிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. இதுவரை திமுக அரசு 158 கோயில்களை இடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதம், ஆக்கிரமிப்பு என கூறி கோயில்களை இடிக்கும் தி.மு.க அரசும் அதற்கு துணை போகும் அதிகாரிகளும் பட்டா நிலத்தில் உள்ள சில கோயில்களையும் இடித்துத் தள்ளியுள்ளனர். ஆனால், ஆயிரமாயிரம் சட்டவிரோத சர்ச்சுகளும் மசூதிகளும் தமிழகத்தில் நிறைந்து இருக்கையில், அவற்றில் ஒன்றைக்கூட தி.மு.க அரசு இதுவரை இடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.