ஆவணப்படம், குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 17வது பதிப்பு வரும் 29ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்க விழா மும்பையின் ஒர்லியில் உள்ள நேரு மைய அரங்கத்தில் நடைபெறும். அடுத்த மாதம் 4ம் தேதி விருது வழங்கும் நிகழ்ச்சியுடன் திரைப்பட விழா நிறைவடையும். 30 ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் ஜப்பான் கூட்டு தயாரிப்பில் உருவான முதலாவது அனிமேஷன் படமான ராமாயணா இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. சிறந்த திரைப்படத்துக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் தங்க சங்கு விருது வழங்கப்படும். ஆவணத் திரைப்பட பிரிவில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள திரைப்பட இயக்குனருக்கு டாக்டர் வி சாந்தாராம் ஆயுட்கால சாதனை விருது வழங்கப்படும். திரைப்பட விழாவுக்கான ஊடகப்பதிவு துவங்கியுள்ளது என திரைப்படபிரிவின் தலைமை இயக்குனரும், மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குனருமான ரவீந்தர் பாக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.