குஜராத்தில் வதோதராவைச் சேர்ந்த முஸ்லிமான சமீர் குரேஷி என்பவர், கடந்த 2019ல் சாம் மார்ட்டின் என்ற போலி பெயருடன், சமூக வலைத்தளத்தில் ஒரு கிறிஸ்தவ பெண்ணுடன் பழகியுள்ளார். பின், அந்த நட்பைப் பயன்படுத்தி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். திருமணம், முஸ்லிம் முறைப்படி நடைபெற்றபோதுதான், சமீர் குறித்த உண்மைகள் அந்த பெண்ணுக்குத் தெரியவந்தது. பின், அந்த பெண்ணை மதம் மாற கட்டாயப்படுத்தி உள்ளார் சமீர். இதனையடுத்து, அப்பெண் அளித்த புகாரின் பேரில், அம்மாநிலத்தில் சமீபத்தில் அமல் படுத்தப்பட்ட கட்டாய மத மாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், இவ்வழக்கை முதல் வழக்காக பதிவு செய்து, சமீர் குரேஷியை கைது செய்துள்ளனர் அம்மாநில காவல்துறையினர்.