மதுரையில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “கூட்டுறவு சங்கங்கள் முழுமையான கணிணி மயமாக்காமல் இருப்பதால் பல பிழைகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேஷன் கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை. நிதியமைச்சராக எனக்கு கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை” என்று கூறினார். தமிழக நிதியமைச்சரே தங்களது ஆட்சியில் ஒரு துறை சிறப்பாக செயல்படவில்லை, திருப்தியில்லை என குற்றம் சாட்டியது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.