மத்திய பிரதேசத்தில் குவாலியரில் தரம் பிரதாப் சிங் என்பவர் டேவிட் என்ற கிறிஸ்தவராக மதம் மாறினார். அவரது தாய் ரோஜ் தேவியை மதம் மாற பலமுறை வற்புறுத்தியுள்ளார். ஆனால், தான் கடைசிவரை ஹிந்துவாகவே வாழ்வேன் என அந்தத்தாய் உறுதியாக இருந்தார். சில காலம் கழித்து இறந்துவிட்ட தன் தாய்க்கு அவரின் ஆசைப்படி ஹிந்து முறையின்படி தகனம் செய்ய டேவிட் மறுத்துவிட்டார். மேலும், தன் தாயை கிறிஸ்தவ முறைப்படிதான் அடக்கம் செய்வேன் என பிடிவாதம் பிடித்துள்ளார். இதனை அறிந்த சரோஜ் தேவியின் (மகளின் மகளான பேத்தி ஸ்வேதா சுமன், கொரோனா காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமுடக்கக் காலத்திலும் தங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று ஜார்க்கண்டில் இருந்து 1100 கி.மீ தூரம் பயணித்து குவாலியர் வந்து தனது பாட்டியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, ஹிந்து முறைப்படி அவரை தகனம் செய்துள்ளார். முன்னதாக, ஸ்வேதா, இதற்காக ஹிந்து ஜாக்ரான் மஞ்சின் உதவியை நாடியிருந்தார் என்பதும் அவர்கள் ஸ்வேதாவுக்கு உதவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.