விரட்டியடிக்கப்பட்ட தி.மு.கவினர்

துரைப்பாக்கம், கல்லுக்குட்டையில் உள்ள அரசு நிலத்தில் 5,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. நீர்நிலையான இப்பகுதியில் உள்ள காலி இடங்களை, அ.தி.மு.கவினர் சிலர் ஏற்கனவே வளைத்து போட்டு விற்பனை செய்து வந்தனர். அப்போது முதல்வரான ஜெயலலிதா, கட்சி நிர்வாகிகள் மீது தைரியமாக நடவடிக்கை எடுத்தார். தற்போதைய ஆட்சி மாற்றத்துக்கு பின் தி.மு.க.,வினர் சிலர் தற்போது, அந்த இடத்தின் முகப்பில் இருந்த குடிநீர் தொட்டியை அகற்றி, வேலி போட்டு ஆக்கிரமிக்க முயன்றனர். அந்தத் .தகவலையடுத்து துரைப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதற்குள் அப்பகுதி பெண்கள், காவல்துறையினர் கண் முன்பாகவே ஆக்கிரமிக்க வந்த தி.மு.கவினரை, விறகு கட்டை, துடைப்பம் கொண்டு சரமாரியாக தாக்கினர். அவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர் அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்ற ரமேஷ் மணிகண்டன், ராஜலிங்கம், சத்யா உள்ளிட்டோர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல இன்றைய முதல்வர் ஸ்டாலினும் தன் கட்சியினர் என்று பாராமல் நடவடிக்கை எடுப்பாரா என மக்கள் கேட்டுள்ளனர்.