பேரணி கோஷங்களுக்கு நிர்வாகிகளே பொறுப்பு

பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நடத்திய போராட்டத்தின்போது, 11 வயது சிறுவன், ஹிந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் விதமாகவும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கோஷமிட்டான். இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த நாட்டில் என்ன நடக்கிறது? எந்த ஒரு பேரணி, ஆர்ப்பாட்டத்தின்போதும் எழுப்பப்படும் கோஷங்களுக்கு அதை ஏற்பாடு செய்வோரே பொறுப்பாவர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ, பேரணியில் பங்கேற்றோர் கோஷமிட்டாலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே அதற்கு பொறுப்பு. அதனால், எந்த ஒரு பேரணி, போராட்டத்தின்போதும் தவறுகள், வன்முறைகள் நடந்தால், நிகழ்ச்சியை ஏற்பாட்டாளரையே பொறுப்பாக்க வேண்டும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.