மும்பை பங்குச் சந்தையில் மத்திய பட்ஜெட் குறித்து தொழில்துறை தலைவர்களுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துயைாடினார்.அப்போது அவர், ‘தற்போதைய மத்திய பட்ஜெட் நாட்டின் தேவைகள் மீது கவனம் செலுத்துகிறது.இதில் மூலதன செலவு 35 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிக்க, ரூ.1 லட்சம் கோடி மாநிலங்களுக்கு, வட்டியில்லா கடனாக 50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.மக்களுக்கான திட்டங்களில் மத்திய அரசும் மாநிலங்களும் இணைந்து ரூ.10.5 லட்சம் கோடியை செலவழிக்கும்.இதனால், பொருளாதார நடவடிக்கைகள் 3 முதல் 4 மடங்கு பெருகும்’ என தெரிவித்தார்.