தி.மு.கவின் இரட்டை நிலைப்பாடு

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பிரச்சனை என எந்தப் பிரச்சனையாக இருந்தாலும், ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு என்பது தி.மு.க.வுக்கு கைவந்த கலை. அவ்வகையில், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க, அவற்றை ஜி.எஸ்.டி வரம்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். இது எப்படியாவது ஆட்சியைப் என்று பிடித்து விடவேண்டும் என்பதற்கான தி.மு.கவின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாடு. ஆனால், தற்போது, ஜி.எஸ்.டியின் கீழ் பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவதை தமிழக அரசு எதிர்க்கிறது. இது தேர்தலுக்கு பிந்தைய தி.மு.க.வின் நிலைப்பாடு. பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டியின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்து தி.மு.க.வின் தேர்தலுக்கு முந்தைய நிலைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டும் என்று தமிழக முதவர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.