படங்களை அகற்றிய தி.மு.கவினர்

ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை அப்பகுதி தி.மு.கவினர் அடாவடியாக அகற்றியுள்ளனர். இதுகுறித்து, பா.ஜ.க சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் அஷ்வின் குமார், பட்டாபிராம் காவல் நிலையத்தில் இதுகுறித்து அளித்துள்ள புகார் மனுவில்,”உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, ஆவடிசார்பதிவாளர் அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரது படங்கள் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி வைக்கப்பட்டது. ஆனால், கடந்த 15ம் தேதி, ஆவடி வடக்கு பகுதி தி.மு.க செயலாளர் நாராயண பிரசாத், ஆவடி மாநகராட்சி கவுன்சிலர் வீரபாண்டி மற்றும் 7 பேர் கொண்ட தி.மு.க நிர்வாகிகள், அந்த படங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். எனவே, தி.முக.வினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் இச்சம்பவம் விசாரணைநடத்தி வருகின்றனர். இதற்கிடையே, சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்ட குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் படங்கள் அவசர அவசரமாக மீண்டும் மாட்டப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.