தஞ்சாவூரில் “கும்பகோணத்தில் திராவிட திருவிழா” என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சிக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தி.மு.கவின் எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் தஞ்சாவூர் மேயர் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது மேயர் இருக்கையில் அமர்ந்திருந்த சன். ராமநாதன், உதயநிதி உள்ளிட்டோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அந்த மேயருக்கான அறையில் ஸ்டாலினின் புகைப்படமும் உதயநிதியின் புகைப்படமும் இருந்தது. ஆனால் கருணாநிதியின் புகைப்படம் இல்லை. இதை கண்ட உடன்பிறப்புகள் உதயநிதி ஸ்டாலினை கவர்வதற்காக கருணாநிதியின் புகைப்படத்தை எடுப்பதா? என கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை அவர்களது உட்கட்சி விவகாரம், வாரிசு அரசியல், திராவிட மாடல் என விட்டுவிடலாம். ஆனால், மேயர் சன். ராமநாதன், வெளியில் வந்து தனது மேயர் உடுப்போடு வந்து உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்து வணங்கினார். மேயர் பதவியின் மாண்பை குலைக்கும் விதத்திலான அவரது நடவடிக்கை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.