பசுவை தேசிய விலங்காக்க வேண்டும்

உ.பி. அரசின் பசுவதைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜாவித், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்த நீதிபதி சேகர் யாதவ் அமர்வு, ‘பாரதத்தின் வேதங்கள், புராணங்கள், இதிகாசங்களில் பசு மிகவும் முக்கியமானது. பாரதக் கலாச்சாரத்தில் பசு ஒருங்கிணைந்த பகுதி. இன்றுள்ள சூழல்களில் பசுவை தேசிய விலங்காக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். பசுப் பாதுகாப்பு என்பதை ஹிந்து சமூகத்தின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக்க வேண்டும். நாட்டின் கலாச்சாரம், நம்பிக்கைகள் பலவீனமடைந்தால் தேசம் பலவீனமடையும். எனவே, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பசுவுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கும் மசோதாவைக் கொண்டுவர வேண்டும், பசுவை கொடுமை செய்வோரை கடுமையாக தண்டிக்கும் பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும். வாழும் உரிமை என்பது கொல்வதற்கான உரிமையைவிட மேலானது. மாட்டிறைச்சி உண்பது அடிப்படை உரிமை அல்ல. பசுக்களை பாதுகாப்பது குறித்துப் பேசியவர்கள் இன்று அதன் எதிரிகளாக மாறியுள்ளனர். வரலாற்றில் முஸ்லிம் ஆட்சியாளர்களும் பாரத கலாச்சாரத்தில் பசுவின் பங்கை உணர்ந்திருந்தனர். பசுவதையைத் தடை செய்தனர்.’ என குறிப்பிட்டனர்.