‘கொரோனா தொற்றுக்காக அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க வேண்டும். நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் பெரும் சிகிச்சைக்காக கட்டணத்தை செலுத்த முடியாவிட்டால், ‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ திட்டத்தின் கீழ் மாநில அரசே அந்த செலவுகளை ஏற்கும். எந்தவொரு நோயாளியும் சிகிச்சையை பெறமுடியாத நிலை ஏற்படக்கூடாது. ஒருவேளை சிகிச்சை பெற்றும் அந்த நோயாளி உயிரிழந்தால் அந்த நோயாளியின் மதத்தின் படியான இறுதிச் சடங்குகளுக்கான செலவை மாநில அரசே ஏற்கும்’ என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். முன்னதாக பல்வேறு செய்தித்தாள்களின் ஆசிரியர்களுடன் மெய்நிகர் உரையாடலின் போது பேசிய முதல்வர் யோகி, மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்று தெரிவித்திருந்தார். கருப்பு மார்க்கெட்டில் மருந்து அக்ஸிஜன் விற்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆக்ஸிஜன் உற்பத்தி, தேவை உள்ளிட்ட விவிகாரங்கள் ஐ.ஐ.டி கான்பூர், ஐ.ஐ.எம் லக்னோ மற்றும் ஐ.ஐ.டி பி.எச்.யு ஆகியவற்றுடன் இணைந்து கையாளப்படும். இவை அரசால் நேரடியாக கண்காணிக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.