மத்தியப் பிரதேசத்தின் கெகாடியா கிராமத்தில், அப்பாவி ஹிந்து மக்களிடம் நல்ல வருமானம் கிடைக்கும், வேலை கிடைக்கும், நோய் குணமாகும் என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான பொய்யான ஆசைகளை காட்டி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி அவர்களை தூண்டிய ஹிராலால் ஜமோத் என்ற கிறிஸ்தவ நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிந்துக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றிய அவருக்கு மிஷனரிகளால் அதற்காக பெரும் நிதி வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஹிராலால் ஜமோத், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மதமாற்றம் செய்து கொண்டிருந்தார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற காவலர்கள் அவரை மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “இப்போதைக்கு மதமாற்றம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் மீது மத்தியப் பிரதேச மத சுதந்திரச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளோம். மேலும் இரண்டு பேரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் செயலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதற்கேற்ப மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூடுதல் துணை ஆணையர் ஷ்ருத்கீர்த்தி சோம்வன்ஷி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.