அரசியல் சாசனமே வழிகாட்டி

உயர் நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரை பதவி உயர்வு கொடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்கும்படி கொலீஜியம் பரிந்துரைத்து இருந்தது. இதற்கு அரசு இன்று அனுமதி அளித்துள்ளது. எனினும், இந்த விஷயத்தில் தேவையற்ற காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கதல்ல எனௌச்ச நீதிமன்றம் அரசுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கருத்துத் தெரிவித்து இருந்தது. இதனை குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் கிரிண் ரிஜிஜூ, உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து உள்ளது என்பது போன்ற செய்திகளை பார்த்தேன். ஆனால் நாட்டில் தலைவர்கள் என்பவர் இந்த நாட்டின் மக்கள். நாம் அனைவரும் சேவகர்கள். தலைவர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது பொதுமக்களே. நாட்டில் வழிகாட்டி என ஒன்று இருக்கிறது என்றால் அது அரசியல் சாசனமே ஆகும். நாடு எப்படி நடக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகிறார்களோ அதன்படி நடக்க வேண்டும் என்று அரசியல் சாசனம் கூறுகிறது. நீங்கள் யாருக்கும் எச்சரிக்கை விட முடியாது. இந்த சிறந்த தேசத்திற்கு, பணியாளர்களாக சேவை செய்வதற்கு நமக்கு ஒரு சேவை கிடைத்து இருக்கிறது என நம்மை நாம் பார்த்தோம் என்றால் அதுவே நல்லது” என கூறினார்.