ஐ.சி.எம்.ஆர் பதிவேட்டில் கடந்த மே19, மே 20 ஆகிய தேதிகளில் ‘மெட்ஆல்’ என்ற தனியார் பரிசோதனை நிறுவனம், 4 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததை பாசிட்டிவ் என காட்டி தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை உரிமத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.