அரசியல் உலகில் அறியப்படாத ஆனால் கடின உழைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பெயர் பெற்றது பா.ஜ.க. அனேகமாக, பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்கள் பெரும்பாலும் ஒருகாலத்தில் மக்களால் அறியப்படாதவர்களாகவே இருந்துள்ளனர். இதற்கு சமீபத்திய உதாரணமாக, உத்தரபிரதேசம் சஹரன்பூரில் உள்ள பலியாகேரி தொகுதியின் வட்டார வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பா.ஜ.க உறுப்பினரான சோனியா. சோனியாவின் கணவர் சுனில் குமார், அதே தொகுதியில் துப்புரவாளராக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியல் வகுப்பை சேர்ந்த சோனியாவை இந்த தேர்தலில் போட்டியிட பா.ஜ.க தலைவர் முகேஷ் சௌத்ரி முன்மொழிந்தார், கட்சி உறுப்பினர்களும் ஒருமித்த ஆதரவு அளித்தனர். மேலும், தேர்தலில் போட்டியிட சுனிலும் தனது மனைவியை ஊக்குவித்தார்.