கடந்த 60 வருட காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கண்டுகொள்ளப்படாத வடகிழக்கு மாநிலங்களில், தற்போதைய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள பல முன்னேற்றத் திட்டங்கள் காரணமாக மக்களின் ஏகோபித்த ஆதரவு வளர்ந்துள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து பா.ஜ.க வெற்றி பெற்று வருகிறது. இதனை உணர்ந்த பல எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில், அசாமில் இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ’வாக இருந்த சுஷாந்தா போர்கோஹைன் தனது பதவியை ராஜினாமா செய்த்துடன் காங்கிரசில் இருந்து விலகினார். பின்னர் அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். இதேபோல, மணிப்பூரின் ஆறு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த கோவிந்த கோந்தூஜம், தனது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியையும் மணிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து, மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்.