சொன்னதை செய்த பா.ஜ.க வேட்பாளர்

கேரளாவின் பாலக்காடு தொகுதி பாஜக வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன், சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையிலும், தொகுதியில் உள்ள மதுரைவீரன் காலனி மக்களுக்கு அளித்த வாக்குறுதியான ‘அனைவரின் வீடுகளுக்கும் புதிய மின் இணைப்பு பெற்று தரப்படும்’ என்ற உறுதி மொழியை, தனது சொந்த பணத்தில் ரூ. 81,525 செலுத்தி மின் இணைப்பை பெற்று கொடுத்துள்ளார். ஆனால், வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நன்றி தெரிவிக்கக்கூட தொகுதி பக்கம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.