மிஷனரியின் வினோத கோரிக்கை

கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் மிசோரமில் உள்ள பிரஸ்பைடிரியன் தேவாலயம் அம்மாநிலத்தின் கிறிஸ்தவர்களிடையே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பெரிய தேவாலயமாகும். அந்த தேவாலயம், ‘கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதன் மூலம் மட்டுமே தங்கள் மக்கள் தொகையை அதிகரிக்க முடியும். எனவே, மாநில அரசில் பணிபுரியும் பெண்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு நாட்களை நீட்டித்து வழங்க வேண்டும்’ என அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. பிரஸ்பைடிரியன் தேவாலயத்தின் முடிவை அங்குள்ள, மிசோரமின் பாப்டிஸ்ட் தேவாலயம், யங் மிசோ அசோசியேஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளும் ஆதரித்தன. பாரதத்தில் மக்கள்தொகையை அதிகரிப்பதன் மூலம் கிறிஸ்தவ மதத்தை அதிகரிக்க இவர்கள் விரும்புவது இதன்மூலம் நன்றாகவே தெரிகிறது. ஏற்கனவே, முஸ்லிம்களும் இதனை தங்கள் கடமையாகவே செய்துவருகின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.