தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடை மற்றும் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிடுவதை தடுக்கும் வகையில் தி.மு.க அரசு அளித்த மறைமுக அழுத்தம் அகியவை தொடர்பாக படக்குழுவினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மேற்கு வங்கத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழ்நாடு அரசு மறைமுகமாக தடை செய்யக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.