கர்நாடக பா.ஜ.க மூத்த தலைவர், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க தலைவரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானவர், கர்நாடக மாநில கொள்கை மற்றும் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக பணியாற்றியவர். ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர் 83 வயதான மூத்த அரசியல்வாதி பி.ஜே.புட்டசாமி. இவர், உலக விவகாரங்களை விடுத்து துறவறம் தழுவினார். துறவறம் ஏற்கும் முன் அவர், இதற்காக பிரம்ம ஆச்சார்யா எனப்படும் பிரம்மச்சரிய சபதம் ஏற்றார். வரும் மே 15ம் தேதி அவர் தைலேஸ்வர கணிகர மகாசம்ஸ்தான மடத்தின் முதல் பீடாதிபதியாகவும் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் அவருக்கு பூர்ணானந்தபுரி சுவாமி என்ற புதிய பெயர் சூட்டப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.