கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்படும்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரமுக்தீஸ்வரர், கோதண்டராமர் கோயில்களை ஆய்வு செய்த ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ‘தமிழகத்தில் உள்ள கோயில்கள், திருக்குளங்கள், தேர் உள்ளிட்டவற்றை புனரமைக்கும் பணிகள் ரூ. 100 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரமுக்தீஸ்வரர், கோதண்டராமர் கோயில்,  சிறுவாபுரி முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் விரைவில் மீட்கப்படும்; கடந்த 70 நாட்களில், ஆக்கிரமிப்பில் இருந்த 600 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன’ என தெரிவித்தார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்துள்ள நெட்டிசன்கள், ‘வடபழனி கோயில் நிலம் மீட்டதாக சொல்லும் அமைச்சர், அதே கோயில் நிலத்தை மசூதிக்கு தாரை வார்க்க சம்மதித்தது ஏனோ? மீட்பதே தாரை வார்க்கத்தானோ?’ என கேட்கின்றனர்.