சாமாஜிக் சமரசதா நன்றி

துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் (என்.சி.எஸ்.கே) பதவிக் காலத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீட்டித்ததற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு சமாஜிக் சமரசதா மஞ்ச் அமைப்பு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. இதுகுறித்து சமாஜிக் சம்ரசதா மஞ்ச் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘முந்தைய அரசு, இந்த ஆணையத்தின் பதவிக் காலத்தை ஆறு மாதங்கள், ஓராண்டு என சிறிது சிறிதாக நீட்டித்தது. அதனால் கமிஷன் திறம்பட செயல்பட முடியவில்லை. ஆனால், தற்போதைய அரசின் இந்த நெண்ட நீட்டிப்பு, துப்புரவு பணியாளர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்’ என தெரிவித்துள்ளது. இந்த ஆணையத்தின் தற்போதைய பதவிக்காலம் மார்ச் 31, 2022 வரை செல்லுபடியாகும். மூன்று ஆண்டுகளுக்கான நீட்டிப்பின் மொத்த செலவின தோராயமாக ரூ. 43.68 கோடியாக இருக்கும். டிசம்பர் 31, 2021 நிலவரப்படி நாட்டில் 58,098 துப்புரவுப் பணியாளர்கள் உள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.