தேசிய அரசியலில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வளர்ச்சியாக பயங்கரமான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் எட்டு துணை அமைப்புகளை தடை செய்ததற்காக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுக்கு கிறிஸ்தவ சமூகம் நன்றி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து கிறிஸ்தவ பிரிவுகள்.குடை அமைப்பான ‘சமூக நடவடிக்கைக்கான கிறிஸ்தவ கூட்டணி’ (காசா) தலைவர் கெவின் பீட்டர், “கடந்த ஐந்து ஆண்டுகளில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பயங்கரவாதிகளால் கிறிஸ்தவ சமூகத்தின் மீதான தாக்குதல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. லவ் ஜிஹாதின் ஒரு பகுதியாக பி.எப்.ஐ செயல்பாட்டாளர்களால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். சி.பி.ஐ (எம்), சி.பி.ஐ, தி.மு.க மற்றும் பெரியாரிஸ்டுகளின் அனுசரணையுடன் கேரளாவிலும் தமிழகத்திலும் இது இன்னும் தொடர்கிறது” என்று குற்றம் சாட்டினார்.
தேசம் முழுவதும் பி.எப்.ஐ நடத்திய பல கொடூரக் கொலைகளை சுட்டிக்காட்டி பேசிய அவர், “அவர்கள் சகிப்புத்தன்மையை நம்பவில்லை. போட்டியாளர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களை அழிப்பதும் ஒழிப்பதும்தான் அவர்களின் குறிக்கோள். கேரளாவில் 2,000 க்கும் மேற்பட்ட சிறுமிகள், அதுவும் தொழில்ரீதியாக படித்த மற்றும் தகுதியான இளம்பெண்கள், லவ் ஜிஹாதின் ஒரு பகுதியாக கடத்தப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு ஆசிய நாடுகளில் பாலியல் அடிமைகளாக விற்கப்படுவதைக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாலா பிஷப் மார் கல்லாரங்கட்டு, போதைபொருள் ஜிஹாதிகள் மற்றும் லவ் ஜிஹாதிகளுக்கு எதிராகப் பேசிய போதிலும், மார்க்சிஸ்ட் தலைமையிலான கேரள அரசு பல்வேறு சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது. கேரளாவில் சர்ச் நடத்தும் பல்வேறு போதை ஒழிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களைக் கண்டறிந்த பின்னர், இந்த நார்கோ ஜிகாதிசத்துக்கு எதிராக பாலா பிஷப் பேசினார். பெண் குழந்தைகளின் பெற்றோரை எச்சரித்தார்” என தெரிவித்தார்.
பேராசிரியர் டி.ஜே ஜோசப்பின் கைகளை பி.எப்.ஐ பயங்கரவாதிகள் வெட்டியதை சுட்டிக்காட்டி பேசிய கெவின் பீட்டர், “மாநிலம் முழுவதும் பி.எப்.ஐ நடத்திய ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்களின் கொலைகள் அதிர்ச்சியளிக்கின்றன. பி.எப்.ஐயின் தொழில்முறை கொலைகாரர்களால் கொல்லப்பட்ட அனைவரும் மத நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காக பிரச்சாரம் செய்த அப்பாவி மற்றும் அமைதியை விரும்பும் மக்கள்” என்று கூறினார்.
“நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் தேசம் கடன்பட்டிருக்கிறது” என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கே.டி தாமஸ் கூறியதை சுட்டிக் காட்டிய கெவின், “பி.எப்.ஐ மீதான தடை குறித்து கேள்வி எழுப்பும் சி.பி.ஐ(எம்) மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் பேச்சைக் கேட்பது கேலிக்குரியது. “மகாத்மா காந்தியின் படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ் காரணம் என்று அன்று முதல் இன்றுவரை பொய்கூறி அதனை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மகாத்மா காந்தியின் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ் மீது நாட்டிலுள்ள எந்த நீதிமன்றங்களும் குற்றம் சாட்டவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த விடுதலைப் புலிகள் மீதான தடையை திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க கூறும்போது காங்கிரஸ் வாய்மூடி மௌனமாக உள்ளது” என்றார்.
சர்ச்சுகளுக்குள் ஊடுருவியதற்கு பி.எப்.ஐ மற்றும் பிற முஸ்லிம் சக்திகளை அவர் குற்றம் சாட்டிய கெவின், “சில ஆன்மீகத் தலைவர்களும், கன்னியாஸ்திரிகளும் பிளாக்மெயில் செய்யப்பட்டு முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாளத்திற்கு நடனமாடுகிறார்கள்” என்று கூறிய கெவின் பீட்டர், “பி.எப்.ஐ மற்றும் பிற அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகமும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அரசுக்கு தங்கள் நன்றி மற்றும் ஆதரவை வழங்குகிறது” என தெரிவித்தார்.