ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்.சி.ஓவில் பாரதம், சீனா, ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன. பெய்ஜிங்கில் உள்ள எஸ்.சி.ஓவின் தலைமையகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயகாந்தனின் ‘சிலநேரங்களில் சில மனிதர்கள்’ (தமிழ்), தாராசங்கர் பந்தோபாத்யாய எழுதிய ‘ஆரோக்ய நிகேதன்’ (வங்க மொழி), ராஜேந்திர சிங் பேடியின் ‘ஏக் சதர் மைலி ஸி’ (உருது), ரச்சகொண்டா விஸ்வநாத சாஸ்திரியின் ‘இல்லு’ (தெலுங்கு), நிர்மல் வர்மாவின் ‘கவ்வே அவுர் காலா பானி’ (ஹிந்தி), மனோஜ் தாஸ் எழுதி ஒடியா சிறுகதைகள், குர்தயாள் சிங்கின் ‘மரீ த தீவா’ (பஞ்சாபி), எஸ்.எல். பைரப்பா எழுதிய ‘பர்வ’ (கன்னடம்), ஜாவேர்சந்த் மேக்னானி எழுதிய ‘வேவிஷால்’ (குஜராத்தி), சையத் அப்துல் மாலிக்கின் ‘சூா்ய முகீா் ஸ்வப்னா’ (அஸ்ஸாமி) ஆகிய நூல்களின் சீன, ரஷிய, ஆங்கில மொழிபெயர்ப்புகள் பரிசளிக்கப்பட்டன. எஸ்.சி.ஓவின் பொதுச் செயலர் விளாடிமிர் நோரோவிடம் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி இதனை வழங்கினார். அப்போது, ‘இந்த நூல்களால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளுக்கு இடையேயான கலாசார உறவு வலுப்படும்’ என நம்புவதாக கூறினார்.