டெல்லி அருகில் உள்ள குருகிராமில் அமைந்துள்ள சீன தொலைத்தொடர்பு உபகரண நிறுவனமான இசட்.டி.இ (ZTE) அலுவலகம், அதன் மூத்த நிர்வாகிகளின் குடியிருப்புகளில் கடந்த ஆகஸ்ட் 17 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில், வரி ஏய்ப்பு, போலி செலவுகள், சட்டவிரோத பங்கு கொள்முதல், பண பரிவர்த்தனை, கணக்கு முறைகேடுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள பல விதிமீறல்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தது கண்டறியப்பட்டது. அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, லி ஜியான் ஜுன் மற்றும் பிற உயர் நிர்வாகிகளிடம் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.