பயங்கரவாதிகள் கைது

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. வங்க மொழி பேசக்கூடிய 15 பயங்கரவாத அமைப்பினரை உருவாக்கியுள்ளது. மும்பை தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்போல மீண்டும் பாரதத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்த பயங்கரவாதிகளை ஐ.எஸ்.ஐ பயிற்றுவித்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். சீசேம், ஒசாமா என்ற பாகிஸ்தானின் இரண்டு பயங்கரவாதிகளிடம் இருந்து 1.5 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது. இவர்களிடம் உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள், ரயில்வே பாலங்களை தகர்க்க திட்டமிட்டனர். பல மாநிலங்களில் உள்ள ஸ்லீப்பர் செல்களுடன் இவர்கள் தொடர்பில் இருந்தனர். ஓமன் நாட்டை சேர்ந்தவர்கள் பாகிஸ்தானுக்கு கடல் மார்க்கமாக சென்று ஆயுதப் பயிற்சி பெறுகின்றனர் என்ற விவரங்கள் தெரியவந்தது.