பயங்கரவாதிகள் மிரட்டல்

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு மீறல்கள் தொடர்பான மனுவை திங்கள் அன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது உச்ச நீதிமன்றம். அதற்கு முன்பாக, இந்த பயங்கர நிகழ்வுக்கு பொறுப்பேற்று பாரதத்தின் வெளியே இருந்து, முன்பே பதிவு செய்யப்பட்ட செய்தி சில வழக்கறிஞர்களுக்கு தொலைபேசி வாயிலாக அனுப்பப்பட்டு உள்ளது. ‘மத்திய அரசுக்கு உதவும் வகையில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் மேற்கொள்ளக் கூடாது. இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் விலகி இருக்க வேண்டும்’ என்ற எச்சரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தது. சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs for Justice) என்ற காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தான், இந்த பாதுகாப்பு விதிமுறை மீறல்களுக்கு காரணம் என்று பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர்.