பயங்கரவாத இமாம்கள் கைது

அஸ்ஸாமில் உள்ள மசூதிகள் மற்றும் மதரசாக்களில் இயங்கும் முஸ்லிம் ஜிஹாதி பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அல்கொய்தா மற்றும் அதன் அன்சருல்லா பங்களா டீம் ஆகிய தடைசெய்யப்பட்ட இரண்டு பயங்கரவாத குழுக்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததற்காக ஜலாலுதீன் ஷேக் மற்றும் அப்துஸ் சுப்ஹான் ஆகிய இரு இமாம்களை அஸ்ஸாம் மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ​​அல்கொய்தா இந்திய துணைக் கண்டம் (AQIS), ஜிகாதி இலக்கியங்கள், நோட்டீஸ்கள், புத்தகங்கள், அலைபேசிகள், சிம் கார்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் பயங்கரவாதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தது, இளைஞர்களை ஜிஹாத்தில் ஈடுபட ஊக்குவித்தது, ஸ்லீப்பர் செல்களை உருவாக்கியது போன்றவற்றிற்கு கணிசமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதலாக, இந்த நபர்கள், ஒரு பேச்சரங்கை துவக்கி அங்கு ஏ.கியு.ஐ.எஸ் பயங்கரவாத உறவுகளைக் கொண்ட ஏராளமான வங்கதேச பிரஜைகள் விருந்தினர் அழைத்து பேச வைத்துள்ளனர். வர்களுக்கு தளவாட ஆதரவை வழங்குவது, தப்பியோடிய வங்கதேச பிரஜைகளுக்கு அடைக்கலம் அளிப்பது என பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இவர்கள் இருவரும் விசாரணையில் ஒப்புக்கொண்டனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.