காஷ்மீரின் ரஜோரி எல்லையில் கடந்த 22ம் தேதி இரவு ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பாரத ராணுவ வீரர்கள் கண்டறிந்தனர். அப்போது எல்லையில் வைக்கப்பட்டிருந்த வேலியை வெட்டி உள்ளே நுழைந்த முஸ்லிம் பயங்கரவாதிகள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் தப்பியோடிய நிலையில், ஒரு பயங்கரவாதி மட்டும் குண்டு காயங்களுடன் பிடிபட்டான். அவனிருந்து இயந்திர துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து கண் விழித்தான். அந்த பயங்கரவாதியிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி மாவட்டத்தைச் சேர்ந்த டபாரக் உசேன் என்ற அந்த நபர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயில் பணிபுரியும் யூனஸ் செளத்ரி என்ற அதிகாரிதான் அவனுக்கு பயிற்சி அளித்து, பாரதத்தில் தாக்குதல் நடத்த அனுப்பி வைத்தார். தாக்குதலை மேற்கொள்வதற்காக 3 பயங்கரவாதிகளுக்கு தலா ரூ. 30 ஆயிரம் கொடுத்தார். இதேபோல, நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை பாரதத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஐ.எஸ்.ஐ பயிற்சி அளித்து வருகிறது என வாக்குமூலம் அளித்தான். இதையடுத்து, டபாரக் உசேனை ராணுவத்தினர் கைது செய்தனர். இதனிடையே அந்த பயங்கரவாதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரிய வகையான ‘ஓ நெகட்டிவ்’ ரத்தத்தை பாரத ராணுவ வீரர்கள் 3 பாட்டில்கள் வரைகொடுத்து காப்பாற்றியுள்ளனர். ராணுவ வீரர்களின் ரத்தம் சிந்த வைக்க வந்த நபருக்கு அந்த ராணுவ அதிகாரிகளே ரத்தம் கொடுத்து காப்பாற்றியது அவர்களது பெருந்தன்மை.