குழந்தைகள், பெண்களை பயன்படுத்தி பயங்கரவாதம்

ம் அண்டை நாடான பாகிஸ்தான், ஜம்முகாஷ்மீரில் தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வந்தது. ஜம்முகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019ல் நீக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு தீவிரமடைந்தது. இதனால், எல்லையை தாண்டி ஊடுருவி, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது குறைந்தது.

அவ்வப்போது ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும், ஜம்முகாஷ்மீரில் பொதுவாக அமைதி நிலவி வருகிறது. சமீபத்தில், ‘ஜி – 20′ தொடர்பான நிகழ்ச்சிகளும் அங்கு நடந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.., புதிய ஆபத்தான சதித் திட்டத்தை தீட்டியுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. ஜம்முகாஷ்மீரைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளை தங்களுடைய பணிகளுக்கு, .எஸ்.., மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்துகின்றன.

தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவே, பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். அதே நேரத்தில் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலுக்கும் இவர்களை பயன்படுத்துவதாக ராணுவம் கூறியுள்ளது.

இது குறித்து, ஸ்ரீநகரை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘சினார் கார்ப்ஸ்என்ற படைப் பிரிவின் தலைவரான லெப்டினென்ட் ஜெனரல் அமர்தீப் சிங் அவ்ஜ்லா கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் இருந்து ஐ.எஸ்.., மற்றும் பயங்கரவாத அமைப்புகள், இங்குள்ள பயங்கரவாதிகள் மற்றும் தங்களுக்கு உதவுவோருடன் தகவல்கள் பரிமாறிக் கொள்வது சமீப காலமாக குறைந்தது.

வழக்கமான தொலை தொடர்பு வசதிகள் வாயிலாக தகவல் பரிமாறுவது திடீரென குறைந்துள்ளது. நம்முடைய தொழில்நுட்ப உளவுப்பிரிவு இது குறித்து எச்சரிக்கை விடுத்தது. .எஸ்.., மற்றும் பாக்., பயங்கரவாத அமைப்புகளுக்காக இங்கு களமிறங்கி பணியாற்றி வந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர் அல்லது மனம் திருந்தியுள்ளனர்.

இது போன்ற உதவி செய்யக்கூடியவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், .எஸ்.., மற்றும் பாக்., பயங்கரவாத அமைப்புகள் புதிய முறையை பயன்படுத்துவது தெரியவந்துஉள்ளது. ஜம்முகாஷ்மீரிலும், எல்லையிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ராணுவம் எப்போதும் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, எல்லையைத் தாண்டி ஊடுருவுவது வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான் உளவு அமைப்பு, மாற்று வழிகளை யோசித்து வருகிறது.

அதன்படியே, இந்த விபரீதமான முயற்சியில் ஐ.எஸ்.., ஈடுபட்டுள்ளது. இங்குள்ள பெண்கள், குழந்தைகளை தங்களுடைய பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது. பொதுவாக தகவல்கள் பரிமாற்றத்துக்காகவே இவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அதே நேரத்தில் சில நேரங்களில் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்துவதற்கும் இவர்களை பயன்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் ராணுவத்துக்கு கிடைத்துள்ளன. மற்ற அமைப்புகளுடன் இணைந்து, பாகிஸ்தானின் இந்த முயற்சியை முறியடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.