காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குல்காம் மாவட்டத்திலுள்ள ஒரு வங்கிக்குள் நேற்று காலை நுழைந்த பயங்ரவாதிகள் மேலாளர் விஜய் குமாரை சுட்டுக்கொலை செய்தனர். உயிரிழந்த விஜய்குமார் எலாகுவாய் தெஹாதி வங்கியில் பணியாற்றி வந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஹனுமன்கர் பகுதியில் வசித்து வந்தார். முன்னதாக, இரு தினங்களுக்கு முன், குல்காம் மாவட்டம் கோபால்பூராவில் உள்ள பள்ளி ஒன்றுக்குள் நேற்று புகுந்த பயங்கரவாதிகள், அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை ரஜினி பாலா என்பவரை சுட்டுக்கொலை செய்தனர். கடந்த மாதம் 12ம் தேதி புத்காம் மாவட்டம் ஷேக்புரா பகுதியில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த காஷ்மீரி பண்டிட்டான ராகுல் பட் என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். இப்படி தொடர்ந்து ஹிந்துக்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதால், காஷ்மீரை விட்டு வெளியேறப் போவதாக 4,000 காஷ்மீர் பண்டிட்கள் அறிவித்துள்ளனர். பல ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வேறு இடத்துக்கு தங்களுக்கு இடமாறுதல் அளிக்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.