இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாசுக்கும் சமீபத்தில் நிகழ்ந்த மோதலையடுத்து அங்கு பல உலக நாடுகள் முயற்சியில் போர்நிறுத்தம் ஏற்பட்டது.எனினும், பயங்கரவாத அமைப்பபான ஹமாஸ் இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்த்கொண்டுதான் உள்ளது என இஸ்ரேலில் நடக்கும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன.ஜெருசலேமில் அம்யூனேஷன் ஹில் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இஸ்ரேல் தேசிய காவல் தலைமையகத்தின் முன்பு உள்ள ஸ்லோமோ சல்மான் ஷ்ராகா தெருவில் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு இஸ்ரேலியர்கள் கத்தியால் குத்தப்பட்டனர்.அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்கைக்கு அனுப்பப்பட்டனர்.
‘ஹமாஸ் மற்றும் பி.எல்.ஓ அமைப்புகள் இதற்கு பொறுப்பு இல்லை என்று பாலஸ்தீனிய ஊடகங்கள் கூறுகின்றன.ஆனால் பாலஸ்தீனிய அரசு அந்த ஜிஹாதியின் குடும்பத்திற்கு பணத்தை கொடுத்துவிடும். பயங்கரவாதிகளுடனான போர்நிறுத்தம் என்பது ராக்கெட் போன்ற தாக்குதல்களுக்குத்தானே தவிர, ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலியர்களை கொல்ல முயற்சிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார்கள் என்ற பொருள் அல்ல. ஹமாஸ் தலைமை, யூத அரசுக்கு எதிராக ‘ஜிஹாத்’ தொடரும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஈரான் ஆதரிக்கிறது. பயங்கரவாதிகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீது நிகழ்த்தும் ராக்கெட் தாக்குதல்கள் முதல் அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச் சூடு, கத்தியால் குத்தி கொலை செய்தல்வரை அனைத்தையுமே தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இஸ்ரேல் மீண்டும் போராடி பயங்கரவாதிகளைக் கொல்லும் வரைஊடகங்கள் இதைப் பற்றி பேசாது’ எனடேனியல் கிரீன் குறிப்பிட்டுள்ளார்.