குமரியில் கோயில் சிலை உடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அடுத்துள்ள ராமன்புதூரில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் ஒன்று உள்ளது. கோயில் இருந்த நிலத்தை விற்ற அதன் உரிமையாளர் மொத்தமுள்ள 71 சென்ட் நிலத்தில் கோயில் உள்ள மூன்று சென்ட் நிலம், அதிலுள்ள விக்ரகங்களை தவிர்த்து நிலத்தை விற்றுள்ளார். அந்த நிலத்தை கிறிஸ்தவரான நத்தானியேல் என்பவர் விலைக்கு வாங்கினார். பின்னர், அந்த நிலத்தில் உள்ள கோயில் சிலைகளை நத்தானியேலும் அவருடைய குண்டர்களும் உடைத்து உள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவலர்கள் நத்தானியேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற மாவட்ட பா.ஜ.க தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நூறாண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வணங்கி வந்துள்ள இக்கோயிலையும் சாமி சிலைகளையும் உடைத்த கிறிஸ்தவ மத வெறியர் நத்தானியலையும் குண்டர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்காக குமரி மாவட்ட பா.ஜ.க போராடும் என்று பா.ஜ.க மாவட்ட நிர்வாகி தெரிவித்தார்.