ஐதராபாத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு முகமது நபியை அவதூறாகப் பேசியதாகக் கூறி தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ டி ராஜா சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் பேசும் வீடியோவை வெளியானதைத்தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து ராஜா சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக, ஹைதராபாத்தில் தென் மண்டல துணை ஆணையர் அலுவலகத்தில் முஸ்லிம்கள் கடுமையான போராட்டத்தை நட்த்தினர். அப்போது, சிங் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜா சிங்கின் தலையை துண்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர். தான் கைது செய்யப்பட்டது குறித்து பேசிய சிங், இன்று ஊர் முழுவதும் என் மீது புகார்கள் வந்துள்ளன. என் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது? பல ஹிந்து மதப் பிரமுகர்களைப் பற்றியும் நகைச்சுவையாகக் கூறப்பட்ட நிலையில், எனக்கு எதிராக மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது ஏன்? அப்படியெனில், நமது ராமர் சீதை எல்லாம் கடவுள்கள் இல்லையா? என்று கேட்டார். முன்னதாக ஆகஸ்ட் 19 அன்று, ஹைதராபாத்தில் நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிக்கு முன்னதாக, ராஜா சிங் மற்றும் 4 பேர் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டனர். முஸ்லிம் நபரான முனாவர் ஃபரூக்கி, ஹிந்து மதத்தையும் ஹிந்து தெய்வங்களையும் கொச்சைப்படுத்தி பேசியதாக அவர் மீது பல வழக்குகள் உள்ளன என்பது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜா சிங் தலையை துண்டிக்க வேண்டும் என கோஷமிட்டவர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை என்பது வேறு விஷயம்.