தங்கள் நாட்டு விமானப்படைக்கு விமானங்கள் வாங்க சீனா சென்றிருந்த அர்ஜென்டினா விமானப்படையின் குழுவினர் சீனாவின் ஜே.எப் 17 விமானத்தின் தரத்தை குறித்து கவலை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தகைய சீன போர் விமானங்களில் ரஷ்ய என்ஜின் சீன விமானத்திற்கு பயன்படுத்தி வரப்படுகிறது. தற்போது ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் எதிர்காலத்தில் என்ஜின் தயாரிப்பு, உதிரி பாகங்கள் சப்ளை தங்கு டையின்றி நடைபெறும் வாய்ப்புகள் பற்றியும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, அர்ஜென்டினாவிடம் ரஷ்ய என்ஜின் பொருத்தப்பட்ட சீன விமானம் அல்லது ரஷ்ய விமானங்களை வாங்க வேண்டாம் மாறாக அமெரிக்காவின் எப் 16 அல்லது அமெரிக்க என்ஜின் கொண்ட பாரத தேஜாஸ் வாங்குமாறு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கும் அர்ஜென்டினாவுக்கும் உள்ள பிரச்சனைகள் காரணமாக பிரிட்டிஷ் தயாரிப்பு பாகங்களை கொண்ட போர் விமானங்களை அர்ஜென்டினாவுக்கு விற்பனை செய்வதற்கு இங்கிலாந்து தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. சமீபத்தில் கூட ஸ்வீடன் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் இங்கிலாந்தின் அழுத்தம் காரணமாக இந்த போட்டியில் இருந்து பின்வாங்கிக் கொண்டது நினைவு கூரத்தக்கது. இந்த வாரம் அர்ஜென்டினா சென்றிருந்த பாரதக் குழுவினர் அர்ஜென்டினா விமானப்படையின் தலைமை தளபதியை சந்தித்து இந்த பிரச்சனைகள் விவாதித்தனர். இதன் காரணமாக அர்ஜென்டினா வாங்கவுள்ள போர் விமானங்கள் போட்டியில் பாரதத்தின் தேஜாஸ் தற்போது முன்னனியில் உள்ளது.