பாலியல் தொல்லை தந்த ஆசிரியர்

கேரள மாநில கோழிக்கோட்டில் உள்ள பள்ளி ஒன்றில், பள்ளி மாணவ மணவிகளிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோ) பல்வேறு பிரிவுகளின் கீழ், தலகுளத்தூரில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் அப்துல் நாசரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, அப்துல் நாசர் மொத்தம் ஐந்து மாணவ மாணவிகளைத் துன்புறுத்தியுள்ளார். அவர்களில் இருவர் சிறுவர்கள். இந்த சம்பவம் நடந்த உடனேயே, குற்றம் சாட்டப்பட்டவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். மாணவர்களின் கூற்றுப்படி, ஆசிரியர் அநாகரீகமாக அவர்களிடம் பேசியதுடன் தகாத முறையில் அவர்களைத் தொட்டார். அவர்களில் இருவர் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகியுள்ளனர். அவர் மாணவர்கள் மாணவிகளுடன் நட்பு கொண்டார். இந்த சம்பவம் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வெவ்வேறு சமயங்களில் நடந்தது. இவர்களது பள்ளியில் நடந்த கவுன்சிலிங்கின் போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து பள்ளி நிர்வாகம் குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளித்தது. குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் மூலம் ஆசிரியர் மீது மூன்று வாரங்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது.