பெட்ரோல் டீசல் மீதான வரி

மாநிலங்களவையில் பெட்ரோல் டீசல் மீதான பல்வேறு வரிகளால் ஏற்பட்டுள்ள விலை உயர்வை குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, ‘பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி, தற்போதைய நிதி நிலையை கருத்தில் கொண்டு, உட்கட்டமைப்பு, பிற மேம்பாட்டு செலவினங்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 2010  முதல் சந்தை விலை நிலவரத்தை ஒட்டியே பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது’ என கூறினார். மேலும், ‘சி.ஜி.எஸ்.டி சட்டத்தின் பிரிவு 9 (2) இன் படி, பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டியில் சேர்ப்பதற்கு ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரை தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டங்களில் எந்த ஒரு மாநிலமும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யில் சேர்க்க பரிந்துரைக்கவில்லை’ என்பதையும் தெரிவித்தார்.