பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி

ஜி – 7 நாடுகள் அமைப்பில் உள்ள கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் தலைவர்கள் கூட்டம் பிரிட்டனில், வரும் 11, 12, 13 தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், முகநூல், டுவிட்டர், அமேசான், கூகுள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன என பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுகள் வைக்கின்றன. எனவே, சர்வதேச அளவில் சீரான வரி விதிப்பு முறை குறித்து இந்த நிதியமைச்சர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில், இது போன்ற நிறுவனங்கள், தாங்கள் செயல்படும் நாடுகளில் 15 சதவீத வர்த்தக வரியை செலுத்த வேண்டும். தங்கள் லாபத்தின் ஒரு பகுதியை அந்த நாட்டில் மீண்டும் முதலீடு செய்ய வேண்டும். இதனால், அந்நிறுவனங்கள், வரி குறைந்த நாடுகளில் முதலீடுகளை குவிப்பது, வரி எய்ப்புகள் செய்வதை தடுக்க முடியும் என வலியுறுத்தப்பட்டது.