டாடாவின் உயர்ந்த உள்ளம்

கொரோனா தொடர்பான அகால மரணங்கள் அவர்களது குடும்பங்களை உணர்ச்சி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வெகுவாக பாதிக்கிறது.குறிப்பாக குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் உறுப்பினர் இறந்துவிட்டால் அது மோசமானதொரு சூழல்தான் என்பது மறுப்பதற்கில்லை.கொரோனாவால் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவ போரோசில் மற்றும் ஓ.ஒய்.ஒ உள்ளிட்ட சில கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்நிலையில், பாரதத்தின் புகழ் பெற்ற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான டாடா ஸ்டீல், கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு, “உங்களுடன், நேற்று, இன்று மற்றும் நாளைக்கான ஒரு வாக்குறுதி” என்ற திட்டத்தின் கீழ், இறந்தவரின் 60 வயது வரை தொடர்ந்து சம்பளம், மருத்துவ சலுகைகள், வீட்டு வசதிகளுடன் அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து வழங்கப்படும். அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவுகளை அவர்கள் பட்டம் பெறும் வரை ஏற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.டாடா நிறுவனம், நமது நட்டிற்கு எந்த ஒரு இடர்பாடு வந்தாலும் முதலில் ஓடி வந்து உதவும் ஒரு நிறுவனம் என்பது பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.கடந்த கொரோனா முதல் அலை, தற்போதைய 2வது அலையின் போதும் ரூ. 500 கோடிக்கும் அதிகமான உதவிகள், 30,000 டன் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கல், ஆக்ஸிஜன் போக்குவரத்துக்கு உதவ 14 கிரையோஜெனிக் கொள்கலன்கள் இறக்குமதி என பல்வேறு உதவிகளை டாடா நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது.