முஸ்லிம் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக 27 ஆண்டுகளுக்கு முன்பு தஸ்லிமா நஸ் ரீன் என்ற வங்கதேச எழுத்தாளர் வங்கதேசத்தை விட்டு வெளியேறினார். கொல்கத்தாவில் தங்கிய அவரை அங்கிருந்து வெளியேற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அச்சுறுத்தினர். மேற்குவங்க மாநில அரசும் அவரை வெளியேற்றியது. அதுமுதல் அவர் டெல்லியில் வசித்து வருகிறார். சமீப காலமாக, அவரது சமூக ஊடக கணக்கை ஹேக் செய்தும், அவர் இறந்துவிட்டதாக போலி செய்திகளை பரப்பியும் வருகின்றனர் ஜிஹாதி பயங்கரவாதிகள். இந்த காரணங்களால், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அவர் இறந்துவிட்டதாக இரண்டுமுறை முகநூல் நிறுவனம் தெரிவித்தது. தான் உயிருடன் இருப்பதாக தெரிவித்து, போராடி தனது கணக்கை மீட்டார் தஸ்லிமா. நியாயமாக நடந்துக்கொள்ளும் பல வங்கதேச பிரமுகர்களும் இதே போன்ற சம்பவங்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் வங்கதேச ஆர்வலர்களை குறிவைத்து நடத்தப்படும் ஜிஹாதிகளின் சைபர் தாக்குதலாகவே கருதப்படுகிறது.