தாரை வார்த்த காங்கிரஸ்

தமிழகத்தின் பல கிராமங்களை தனது சொத்து என கூறி அவற்றை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடி மக்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் நிலையில், டெல்லியின் முக்கிய பகுதிகளில் உள்ள 123 அரசு சொத்துக்களை, 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு சிறிது நாட்களுக்கு முன்பாக, வக்பு வாரியத்ற்கு அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு தாரைவார்த்த விஷயம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு வசமிருந்த இந்த சொத்துக்களில் பெரும்பாலானவை, டெல்லியின் முக்கிய பகுதிகளான மதுரா சாலை, லோதி சாலை, மான்சிங் சாலை, பண்டாரா சாலை, அசோகா சாலை, ஜன்பாத், பார்லிமென்ட் ஹவுஸ், கரோல் பாக், சதார் பஜார், கன்னாட் பகுதி, தார்யகன்ஜ் மற்றும் ஜன்க்புரா பகுதிகளில் இருந்த நிலையில், அதனை வக்பு வாரியத்திடம் ‛ஒப்படைத்துள்ளது’ அன்றைய காங்கிரஸ் அரசு. அவசர அவசரமக பல துறைகள் மற்றும் அமைச்சகங்களின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளன. இந்த அனைத்து நடைமுறைகளும் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட்டு, தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்போது மத்திய அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித் தான் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்துள்ளார். இதனை விசாரிக்க 2016ல் ஒரு நபர் கமிட்டி ஒன்றை பா.ஜ.க அரசு அமைத்தது. 2017ல் அதற்கான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. 2018ல் இரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் விசாரணையின் முடிவில் வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்ட நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான முடிவு எட்டப்படவில்லை. உரிய விசாரணை நடத்தி, மத்திய அரசு செயல்படுத்தினால்தான் தாரவார்க்கபட்ட சொத்துகளை வக்பு வாரியத்திடம் இருந்து மீட்க என்று கூறப்படுகிறது.