தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், “இன்று சென்னையில், தமிழ் திரை உலகின் ஜாம்பவான்கள் பாக்யராஜ், ரவி கே சந்திரன், யார் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், தங்கள் சிந்தனைகளை குறும்படமாக வெளியிட்டு திரை உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தமிழ்த் தாய் விருது வழங்கி தமிழக பா.ஜ.க கௌரவித்தது. சிறந்த நடிகர் நடிகைகள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த குறும்படத்திற்கு தமிழ்த் தாய் விருதுகள் வழங்கப்பட்டது. சமுதாய அக்கறையுடன் எடுக்கப்பட்ட 10 குறும் படங்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நலத்திட்ட உதவிகளை விவரிக்கும் மூன்று குறும் படங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ளது. இந்த விழாவை தலைமை ஏற்று நடத்திய கலை கலாச்சார பிரிவு தலைவர் பெஃப்சி சிவா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். தமிழ்த் தாய் விருது 2023 விழாவில் பங்கேற்று சிறப்பித்த புகழ்பெற்ற பாடகி சுசீலா அம்மா, சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், திரைப்படக் கலைஞர்கள் வெண்ணிற ஆடை நிர்மலா, ராதா, சச்சு, ராஜஸ்ரீ, கோவை சரளா, கஸ்தூரி சங்கர், கலை இயக்குனர் தோட்டா தரணி,தொழில்நுட்பக் கலைஞர் ராமலிங்க மேஸ்திரி, பத்திரிகையாளர்கள் மக்கள் குரல் ராம்ஜி, வசீகரன் மற்றும் தமிழக பாஜக மாவட்ட மாநில நிர்வாகிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.