சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு லாரியை ஓட்டிச்சென்றார் லாரி டிரைவர் சண்முகம். இவர் தனக்கு பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்றுக்கு சிறிது தூரம் வழி விடாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆம்னி பஸ் டிரைவர் பஸ்சை லாரியின் குறுக்கே நிறுத்தினார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அந்த பஸ்சின் டிரைவர் சிக்கேகவுடா மற்றும் கிளீனர் பிரசாத் ஆகியோர் லாரி டிரைவரை தாக்கி லாரியின் கண்ணாடிகளை கற்களால் உடைந்தனர். இந்த வீடியோ சமுக ஊடகங்களில் பரவியதை அடுத்து வழக்குப்பதிவு செய்த தமிழக காவல் துறையினர் அந்த பஸ் டிரைவரையும் கிளீனரையும் கைது செய்தனர். இவ்வழக்கில் இவ்வளவு விரைவாக செயல்பட்ட தமிழக காவல் துறை, சில நாட்களுக்கு முன், தனது காருக்கு வழிவிடாத தமிழக அரசு பேருந்து ஓட்டுனரின் கையை கிழித்த தி.மு.க உடன் பிறப்புகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏனோ?