கைகொடுத்த புதுச்சேரி கைவிட்ட தமிழகம்

அதிக வருமானம் இல்லாத புதுச்சேரி மாநிலம் சமீபத்திய பருவ மழையால் தமிழகத்தை போன்றே கடுமையாக பாதிக்கப்பட்டது. எனினும், புதுச்சேரி அரசு, மக்களின் கஷ்டத்தை உனர்ந்து மழை வெள்ள நிவாரணமாக சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூ. 5,000, மஞ்சள் கார்டுக்கு ரூ. 4,500 வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார். 1 லட்சத்து 85 ஆயிரம் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 5,000 ரூபாயும், 1 லட்சத்து 42 ஆயிரம் மஞ்சள் கார்டுகளுக்கு 4,500 ரூபாயும் நிவாரணமாக குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 3.27 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் இதன் மூலம் பயனடைவர். இதற்காக புதுச்சேரி அரசு ரூ. 156 கோடி செலவு செய்துள்ளது. ஆனால், தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசோ பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய சிறிய பையைத் தருகிறோம் அதனை வைத்து சந்தோஷப்படுங்கள் என ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வஞ்சித்துவிட்டது.