தமிழ் இனிது

வாழ்த்துக்கள் என்பது சரியா? வாழ்த்துகள் என்பது சரியா? என்ற ஐயம் பலருக்கு உண்டு. க், ச், ட், த், ப், ற் போன்ற எழுத்துக்களுக்குப் பின் வரும் உகார எழுத்தைத் தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது. தோப்பு – தோப்புகள், வாக்கு –வாக்குகள், கணக்கு – கணக்குகள், வாத்து – வாத்துகள் அது போலவே வாழ்த்து – வாழ்த்துகள் என்பதே சரி. தோப்பு என்பதன் பன்மையைத் தோப்புகள் என்றுதான் எழுதவேண்டும். தோப்புக்கள் என்று அங்கு க் போட்டு எழுதினால் தோப்பில் இருந்து உருவாக்கப்பட்ட கள் என்று தான் பொருள் தருமே தவிர, தோப்பு என்பதற்குப் பன்மையைக் குறிக்காது. எனவே வாழ்த்துக்கள் என்று எழுதினால் அது ஒரு புதிய வகையான பொருள் தொனிக்கும்.
எனவே வாழ்த்துகள் என்பதே வாழ்த்து என்பதன் பன்மை வடிவமாகும்.
(நற்றமிழ் அறிவோம்)
கட்டுரையாளர் : முதுகலைத் தமிழாசிரியை விவேகானந்தா வித்யாலயா, திருவொற்றியூர்