உமேஷை கொன்ற தப்லிகி ஜமாத் அடிப்படைவாதிகள்

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த மருந்தாளுனர் உமேஷ் கோல்ஹே கொலை வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) வெளியிட்டுள்ள குற்றப் பத்திரிகை, அவர் தப்லிகி ஜமாத்தின் தீவிர அடிப்படைவாத முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டதை வெளிப்படுத்தியது. இந்த அடிபடைவாத கும்பலின் செயல் பயங்கரவாதம் என்று கூறிய என்.ஐ.ஏ, கோல்ஹே மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறப்படும் அடிப்படையில் அவர்கள் செய்த இந்த கொலையை சமூகத்துக்கு ஒரு உதாரணமாக காட்ட விரும்பினர். ரியல் எஸ்டேட் வியாபாரியான இர்பான்கான் இந்த படுகொலைக்கு மூளையாக செயல்பட்டான். கோல்ஹே கொலைக்கு முன், நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக பல்வேறு ஊடகங்களில் பதிவிட்டதற்காக, அமராவதி குடிமக்களான ஸ்ரீகோபால் சந்துலால் ரதி, விஷால் ராஜேஷ் பஹாத் மற்றும் ஜெய் குமார் அச்சாதா ஆகியோரும் மதவாத பயங்கரவாதிகளால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். நுபூர் ஷர்மாவின் அறிக்கையை ஆதரித்த பொது மக்களின் மனங்களில் பயத்தை ஏற்படுத்துவதற்காக, உமேஷ் கோல்ஹேவைக் கொல்ல இர்பான் முடிவு செய்தான். இதற்காக ஒரு பயங்கரவாத கும்பலை உருவாக்கினான் ‘குஸ்தாக் இ நபி கி ஏக் ஹி சாஜா, சர் தான் சே ஜூடா’ (நபிக்கு எதிராகப் பேசுவதற்கு ஒரே ஒரு தண்டனை, அது தலையை துண்டிப்பது மட்டுமே) என்ற கொடூரமான சித்தாந்தத்தால் அடிப்படைவாத கும்பல்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என என்.ஐ.ஏ கூறியுள்ளது.